மதுரையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : பின்தொடராதீங்கனு சொல்லியும் கேட்காத ரசிகர்கள் | பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு | அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள் | மனைவி , மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் | சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம் | ஆக்ஷன் கலந்த துள்ளல் உடன் வெளிவந்துள்ள ‛ஆயா ரே பாபா' பாடல் | சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை | சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஷாருக்கானின் கிங் பட வாய்ப்பை இழந்த நயன்தாரா | பயங்கரவாத தாக்குதலால் ‛தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சியை தள்ளிவைத்த சல்மான் |
சித்தாந்த் சஜ்தேவ் இயக்கத்தில் சஞ்சய் தத், மவுனி ராய், சன்னி சிங், பலாக் திவாரி மற்றும் ஆசிப் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛தி பூட்னி'. ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகி உள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் சோஹம் ராக்ஸ்டார் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்திலிருந்து ‛ஆயா ரே பாபா' என்ற பாடல் வெளியிடப்பட்டது. இதை மிகா சிங் பாடி உள்ளார். அவருடன் அக்ஷய் இணைந்து ராப் பகுதிகளை பாடி, பாடல் வரிகளையும் எழுதி உள்ளார்.
இந்த பாடல் வெளியீட்டின்போது பேசிய நடிகர் சஞ்சய் தத், ‛‛இந்த பாடல் படத்துக்கு ஏற்ற வைப்பை தருகிறது. மீண்டும் மிகாவின் குரல் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி உள்ளது. இது கொஞ்சம் மெலோடி கலந்த பெப்பி பாடல். நான் அதன் படப்பிடிப்பை மிகவும் ரசித்தேன், இப்போது பார்வையாளர்கள் அதை ரசிக்க வேண்டும்'' என்றார்.